செய்திகள்

சூது கவ்வும் - 2 டிரைலர்!

சூது கவ்வும் - 2 டிரைலர் வெளியானது...

DIN

சூது கவ்வும் - 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்து உள்ளார். படத்தின் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார்.

ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படம் டிசம்பர் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT