ரைபிள் கிளப் டிரைலர்!
இயக்குநர் ஆஷிக் அபு இயக்கியுள்ள ரைபிள் கிளப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.
அனுராக் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றன.
சன்னிலியோன் நடித்துள்ள கென்னடி படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
Advertisement
Advertisement
தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மகாராஜா படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மலையாள படத்தில் நடித்துள்ளார். ஆஷிக் அபு இயக்கியுள்ள ரைபிள் கிளப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸுக்கு படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மாயநதி, வைரஸ், நீல வெளிச்சம் ஆகிய படங்களின் இயக்கியவர் ஆஷிக் அபு. மகேஷிண்ட பிரதிகாரம், ஈ.மா.யு. ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.