நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இணை.  
செய்திகள்

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா முகூர்த்த நேரம் அறிவிப்பு!

நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலா திருமண நேரம் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது.

DIN

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண நேரம் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இருவரது திருமணமும் குடும்பத்தார் ஒப்புதலின்பேரில் நிச்சயிக்கப்பட்டு, கடந்த ஒரு சில நாள்களாக திருமணச் சடங்குகள் கோலாகலமாக நடைபெற்று வந்தது.

பாரம்பரிய முறைப்படி பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவீட்டார் குடும்பத்தினரும் பங்கேற்று கோலாகலமாக திருமணச் சடங்குகளை நடத்தினர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் புதன்கிழமை (டிசம்பர் 4ஆம் தேதி) இரவு 8 மணிக்கு முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அன்னபூரணா ஸ்டுடியோ வளாகத்தில் இரு நட்சத்திரங்களும் தம்பதியாக இணையும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த திருமண நிகழ்வில், ஏராளமான தெலுங்கு திரைத்துறை நட்சத்திரங்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று இரவு 8 மணிக்கு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், நாக சைதன்யா, சோபிதா கழுத்தில் தாலி அணிவிக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படும் நிலையில், நாகார்ஜுனாவுடன் நட்புப் பாராட்டிவரும் நயன்தாராவும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை சோபிதா துலிபாலாவின் தங்கை சமந்தா துலிபாலா பகிர்ந்து, தனது மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT