FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Updated On : 27 பிப்ரவரி 2026, 7:31 pm IST
நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு! - Center-Center-Delhi
பகிர்:

மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு ம்னு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2017-இல் பிரபல மலையாள நடிகை பாலியல் வழக்கிலிருந்து இன்று(டிச. 8) விடுதலை செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் எர்ணாகுளம் நீதிமன்றத்தால் கடந்தாண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டார்.

நடிகை மீதான பாலியல் அத்துமீறல் குற்ற வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த நிலையில், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்ட ஏ1 முதல் ஏ 6 வரை குற்றவாளிகள் என்றும், ஏ8-ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்த திலீப்புக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் டிச. 8, 2025-இல் தீர்ப்பளித்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப். 27) மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், இவ்வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிகப்பட்டுள்ள பல்சர் சுனி (சுனில்), மார்ட்டின் அந்தோணி, பி. மணிகண்டன், விஜேஷ் வி பி, எச். சலீம், பிரதீப் ஆகிய 6 பேருக்கும் கடுந்தண்டனை விதிக்கவும் கோரப்பட்டுள்ளது.

திலீப் மட்டுமில்லாது, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சார்லி தாமஸ், சனில் குமார் (மேஸ்திரி சனில்) மற்றும் சரத் ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களது விடுதலையையும் எதிர்த்து தீர்ப்பை மறு ஆய்வு செய்யவும் விசாரிக்க மேல்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

summary

Kerala govt files appeal in 2017 actress assault case against actor Dileep's acquittal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments