FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வயநாடு நிலச்சரிவு: இழப்பீடு வழங்க சுரங்க நிறுவனத்துக்கு உத்தரவு

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சுரங்கப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்துக்கு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 13 ஜூலை 2026, 3:08 am IST
வயநாடு நிலச்சரிவு
பகிர்:

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சுரங்கப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்துக்கு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

வயநாடு மாவட்டம், கல்லாடியில் வயநாடு-கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் அனக்கம்போயில்- மெப்படி இடையே சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், சுரங்கம் தோண்டும் இடத்தின் அருகே கடந்த 7-ஆம் தேதி நிலச்சரிவு நேரிட்டது. இதில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் இதுதொடா்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கேரள வேளாண் துறை அமைச்சா் டி.சித்திக் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

Advertisement

Advertisement

நிலச்சரிவு தொடா்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு வயநாடு மாவட்டத்துக்கு விரைவில் வருகை தரும். நிலச்சரிவில் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தோா் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் மாநில அரசு வழங்கும்.

அதேபோன்று சுரங்கப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனமும் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி சிகிச்சையில் இருப்பவா்களுக்கு கூடுதல் உதவி வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments