செய்திகள்

விண்ணை முட்டும் புஷ்பா-2 முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா..?

புஷ்பா-2 முதல் நாள் வசூல்...

DIN

நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் நேற்று(டிச.5) காலை வெளியானது.

படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு வெளிவந்த 'புஷ்பா - தி ரைஸ்' படத்தில் கூலி வேலைக்குச் செல்லும் நாயகன் எப்படி செம்மரக் கடத்தல் செய்யும் சிண்டிகேட்டின் தலைவனாக மாறினார் என்ற கதைக்கருவுடன் தொடங்கும் படம், செம்மரக் கடத்தலைத் தடுக்க வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஃபகத் ஃபாசிலுடன் அல்லு அர்ஜுனுக்கு ஆரம்பமாகும் மோதலுடன் முடிவுக்கு வந்தது. முதல் பாகம் ரூ. 400 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

இந்தியாவில் மட்டும் படம் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜூக்கு இது அதிகபட்ச ஓப்பனிங்காகும்.

இந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

புஷ்பா-2 படத்தின் முதல் நாள் வசூலை தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நாளில் ரூ.294 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியில் வெளியான ‘புஷ்பா 2’, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவானின் சாதனையை முறியடித்து முதல் நாளில் ரூ.72 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.  ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் நாள் வசூலான ரூ.222 கோடி சாதனையையும் புஷ்பா-2 முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT