சசிகுமார்  படம்: எக்ஸ் / சசிகுமார்.
செய்திகள்

அடுத்து எங்கே? சசிகுமார் பகிர்ந்த புகைப்படம்!

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் அடுத்து எங்கே எனப் பதிவிட்டுள்ளார்.

DIN

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். தற்போது நடிகராக தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

அயோத்தி, கருடன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சமீபத்தில் வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, இயக்குநர் ராஜு முருகன், அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன், விஜயா கணபதி ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் ஃபிரீடம் எனும் படத்தில் நடித்திருந்தார். சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை சமீபத்தில் வெளியிட்டனர்.

குண்டு வெடிப்பில் பலியான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தால் அப்போது தமிழகத்திலிருந்த இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில், “அடுத்து எங்கே” எனக் குறிப்பிட்டு சிந்திப்பதுபோன்ற புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஃபிரீடம் படத்தின் அப்டேட்டினை கேட்டு வருகிறார்கள். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மீண்டும் படங்கள் இயக்கவிருப்பதாக சசிகுமார் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT