இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து பின்னர் நடிகர் விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி.
ஹிந்தியில் ஷாருக்கானை இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ.1000கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை பிரியாவை காதலித்து வந்த அட்லி கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்தத் தம்பதிகளுக்கு 2023இல் ஓர் ஆண்குழந்தை பிறந்தது.
இன்று பிரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அட்லி தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:
எனதருமை பாப்பா பிரியா அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீ எனது மகள், எனது அன்பு, எல்லாமே நீதான். எல்லாமே இருந்தாலும் நீ இல்லாவிட்டால் அது முழுமை பெறாது. நீதான் எனது பலம், வெற்றி, கௌரவம், அன்பு எல்லாமே. உன்னுடைய பாய்ஸ்களிடம் இருந்து உனக்கு மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துகள். நான், மீர், பெக்கி, சோக்கி, காஃபி. லவ் யூ. நீதான் எங்களது உலகம். உன்னை பெருமிதம் படுத்துவோம் எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் அட்லியை அவரது நிறத்தினை வைத்து பலரும் கிண்டல் செய்துள்ளார்கள். இருந்தும் அதையெல்லாம் தாண்டி கமர்ஷியல் படங்களில் அசத்தி வருகிறார்.
பிரியா அட்லி ஹிந்தியில் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.