அருண் பிரசாத் / முத்துக்குமரன் படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் சர்ச்சை: முத்துக்குமரனை தரக்குறைவாக பேசிய அருண்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரனை தரக்குறைவாக அருண் பேசிய விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரனை அருண் தரக்குறைவாக பேசிய விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 10வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் நடிகர் ரஞ்சித், பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்நிலையில் இந்த வாரத்தில் பிக் பாஸ் சார்பில் தொழிலாளர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அருண் பிரசாத், ரயான், ராணவ், ஜாக்குலின், சத்யா, பவித்ரா, அன்ஷிதா, ரஞ்சித் ஆகியோர் தொழிலாளர்களாக விளையாடுகின்றனர்.

இவர்களுக்கு வேலை வழங்கும் ஆலை உரிமையாளர், மேலாளர் என செளந்தர்யா, முத்துக்குமரன், மஞ்சரி, ஜெஃப்ரி, வி.ஜே. விஷால், தீபக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டின் ஒருபுறம் தொழிற்கூடம் அமைத்து தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இதனிடையே தொழிலாளர்களுக்கு சங்கம் உருவாக்கி தலைவரை நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அருண் முன்வைக்கிறார்.

தொழிலாளர் சங்கத் தலைவரை நாங்களே (தொழிலாளர்களே) தேர்வு செய்வோம் என்றும் அலுவலகத்தை நாங்களே தேர்வு செய்வோம் எனவும் அருண் குறிப்பிடுகிறார்.

ஆனால், மேலாளரான உள்ள முத்துக்குமரன் ஆலையில் விதிகளைத் திருத்தவும் தளர்த்தவும் தனக்கு உரிமை உள்ளதாக வாதத்தை முன்வைக்கிறார்.

முத்துக்குமரனுக்கு விதிகளை வகுக்க எந்தத் தகுதியும் இல்லை என்றும் பிக் பாஸுக்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார். ஆனால், இதற்கு பதிலளித்த முத்துக்குமரன், எல்லாவற்றுக்கும் பிக் பாஸ் வரமாட்டார். மேலாளராக ஆலையில் விதிகளை வகுக்கிறேன் எனக் கூறுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண், முத்துக்குமரனை தரக்குறைவாக பேசுகிறார். முத்துக்குமரனுக்கு ஆதரவாக வந்த செளந்தர்யாவும் மரியாதை கொடுத்து பேசுமாறு அருணை கண்டிக்கிறார்.

அருண் - முத்துக்குமரன் இடையேயான காரசார வாக்குவாதம் முன்னோட்ட விடியோவாகவும் வெளியாகியுள்ளது. இதில் பலர் முத்துக்குமரனுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT