பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள், சபரிநாதன் குடும்பத்துடன் இணைந்து ஒன்றாக சாமி தரிசனம் செய்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வாகை சூடிய திவ்யா கணேசன் உள்பட நடிகைகள் ஆதிரை, அரோரா, கனி திரு, துஷார் உள்ளிட்டோரும் சாமி தரிசனம் செய்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை வென்ற சபரிநாதனின் குடும்பத்துடன் இவர்கள் ஒன்றாக கோயிலுக்குச் சென்றுள்ளனர். இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் நிறைவு பெற்றது. வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்பட 24 பேர் இதில் கலந்துகொண்ட நிலையில், மக்கள் மனங்களை வென்று, பிக் பாஸ் கோப்பையையும் திவ்யா கணேசன் வென்றார்.
திவ்யாவுக்கு கோப்பையுடன் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை சபரிநாதன் பகிர்ந்துகொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போட்டியாளர்கள் பலருக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
நடிகை கெமி படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ப்ரஜின் 10 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். எதிர்பாராத விதமாக 34 நாள்களில் வெளியேறிய பிரவீன்ராஜ் தேவசகாயம், 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாடகர் கானா வினோத் அடுத்தடுத்த கச்சேரிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போட்டியாளர்கள் திவ்யா கணேசன், கனி திரு, அரோரா, ஆதிரை, துஷார் உள்ளிட்டோர் சபரிநாதனின் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.