முகப்பு
செய்திகள்

நடிகர் சபரியை பெண்கள் காதலிக்க வேண்டும் : கனி திரு அறிவுரை

திரையரங்கை முழுமையாக முன்பதிவு செய்து சபரியின் பிறந்தநாளைக் கொண்டாடிய பிக் பாஸ் போட்டியாளர்கள்...

Updated On : 2 பிப்ரவரி 2026, 3:44 pm IST
பிறந்தநாள் கேக் உடன் சபரிநாதன் / கனி திரு, எஃப்.ஜே. உடன் சபரிநாதன் - படம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனங்களை வென்ற சபரிநாதனின் பிறந்தநாளை பிக் பாஸ் போட்டியாளர்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடினர்.

திரையரங்கை முழுமையாக முன்பதிவு செய்து நெருங்கிய நண்பர்களை அழைத்து சபரியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

முருகன் படம் பதித்த கேக் பிறந்தநாளில் வைக்கப்பட்டிருந்ததால், ஆச்சரியமடைந்த சபரியின் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் மக்களைக் கவர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் சபரி. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தவர்காள், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் சபரியின் பிறந்தநாளை பிக் பாஸ் போட்டியாளர்கள் வெகுவிமர்சையாகக் கொண்டாடியுள்ளனர். இதற்காக முழு திரையரங்கையும் முன்பதிவு செய்து, சபரியை படம் பார்க்க அழைத்து வருவதைப்போன்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

திரையரங்கில் சபரிநாதனின் பிறந்தநாளைக் கொண்டாடிய நண்பர்கள் - படம் - எக்ஸ்

முருக பக்தனான சபரிக்கு, முருகனின் படம் பொரித்த கேக்கை நண்பர்கள் பரிசாக அளித்துள்ளனர். இதனால், ஆச்சரியமடைந்த சபரி, இது போன்ற சர்ப்ரைஸ் கேக்கை எந்தவொரு பிறந்தநாளிலும் பார்த்ததில்லை எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் அரோரா, கெமி, விக்கல்ஸ் விக்ரம், துஷார், அப்சரா சிஜே, கனி திரு, இசைக்கலைஞர் எஃப்.ஜே., சுபிக்‌ஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சபரிநாதன் - இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் விடியோ மூலம் திரையில் பேசிய கனி திரு, சபரி அனைவரின் மீதும் அன்பு வைத்து காதலித்து வருவதாகவும், இந்த ஆண்டு பெண்கள் சபரியை காதலிக்க வேண்டும் எனவும் வாழ்த்து கூறினார்.

கனி திருவின் அறிவுரை - இன்ஸ்டாகிராம்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே மிகத்தகுதி வாய்ந்த பேச்சிலர் என சக போட்டியாளர்களால் சபரி பாராட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Bigg Boss contestants celebrated the birthday of Sabarinathan in a grand manner

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.