FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிக் பாஸ் 10: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் குறித்து...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி. - கோப்புப்படம்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 8 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் 56-வது நாளை எட்டியுள்ளது.

சென்ற வாரம், பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில், இந்த வாரம் மீண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement

Advertisement

இதனிடையே, 8வது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு அஷ்மிதா, அவினாஷ், அன்சர், கரிஷ்மா, தன்யா, ஜேசன், வினோத் பாபு உள்ளிட்ட 15 பேர் தேர்வாகி இருந்தனர்.

இந்த வாரம் முழுவதும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற கரிஷ்மா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த வாரம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, ஷமா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

summary

Information has emerged regarding which contestant was eliminated from Bigg Boss Season 10 this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments