பிக் பாஸ் 10: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர்தான்!
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரத்துடன் வெளியேறிய போட்டியாளர் குறித்து...
காமன்மேன் பிரதிநிதியாக பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிவந்த ஷமா, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
எவிக்ஷன் விலக்கு டிக்கெட்டை வென்றிருந்தபோதும், அதனை அவர் பயன்படுத்தாததால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 7 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் 50 வது நாளை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த வாரத்தின் இறுதியில் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்களின் குறைந்த வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.
அந்தவகையில் இந்த வாரத்தில் முத்தழகி, அஸ்மிதா, அக்ஷிதா, ஷமா ஆகியோர் வெளியேற்றப்படும் நபர்களின் பட்டியலில் இருந்தனர். இவர்களில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக ஷமா வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் போட்டியில் வென்று பரிசாகப் பெற்ற எவிக்ஷன் விலக்கு டிக்கெட்டை இம்முறை ஷமா பயன்படுத்தியிருந்தால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்க மாட்டார். ஆனால், அந்த டிக்கெட்டை இந்த வாரம் பயன்படுத்த விரும்பவில்லை என தொகுப்பாளர் ரம்யா கிருஷ்ணனிடம் ஷமா கூறிவிட்டார்.
இதனால் எதிர்பாராத விதமாக ஷமா வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரிடம் இருந்த நாமினேஷன் விலக்கு டிக்கெட்டும் பயனற்றதாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் அனைவரிடமும் வம்பிழுக்கும் நபராக உள்ள ஜேசனைக் கண்டு அஞ்சாமல், அவருடன் நேருக்கு நேர் நின்று வாக்குவாதத்தில் ஈடுபடும் வெளிப்படையான பெண்ணாக ஷமா இருந்தார்.
தற்போது அவர் வெளியேற்றப்பட்டுள்ளதால், ஜேசனும் அவரின் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், ஷமா போன்ற சிறந்த போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கக் கூடாது எனவும் பிக் பாஸ் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
bigg boss 10 update shama jason koushi ttf vasan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.