FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிகிச்சைக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் ராகவ்! கண்ணீரில் லட்சுமி பிரியா!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து நடிகரும் இசையமைப்பாளருமான ராகவ் வெளியேறியுள்ளது குறித்து...

18 அக்டோபர் 2026, 7:42 pm IST
ராகவ் பிரிவால் அழும் லட்சுமி பிரியா
பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து நடிகரும் இசையமைப்பாளருமான ராகவ் வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயத்தால் கடந்த சில நாள்களாக வலியுடன் இருந்துள்ளார். நிற்கும்போது இருப்பதை விட அமரும்போது அதிகம் வலி ஏற்படுவதால், அறுவை சிகிச்சைக்காக அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

வார இறுதியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்கு பெற்றவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த வாரம் நடிகை சாந்தினி வெளியேற்றப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இதுமட்டுமின்றி அறுவை சிகிச்சைக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து ராகவ்வும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ராகவின் உடல்நிலை குறித்து பேசிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, அவரது காலுக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். கனத்த இதயத்துடன், தனது உடல்நலனுக்கு முன்னுரிமை அளித்து வீட்டை விட்டு வெளியேறுமாறு ராகவிடம் கேட்டுக்கொள்கிறார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்படுகின்றனர். குறிப்பாக, லட்சுமி பிரியா மிகுந்த மனவேதனைக்கு ஆளாகிறார். “இப்போது எனக்கு யாருமே இல்லை என்று தோன்றுகிறது” எனத் தனது வேதனையை வெளிப்படுத்தும் அவர், ராகவை கட்டியணைத்து உணர்ச்சிப்பூர்வமாகப் பிரியாவிடை அளிக்கிறார்.

ராகவ்விடம் விடைபெறும்போது மற்ற போட்டியாளர்களும் கண்கலங்குகின்றனர். கண்ணீரும் உருக்கமான தருணங்களும் நிறைந்த இந்தப் பிரியாவிடை, பிக் பாஸ் வீட்டில் உருவாகும் உறவுகள், விளையாட்டைத் தாண்டியவை என்பதை உணர்த்துகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் கானலாம். ஜியோ ஹாட்ஸ்டாரில் 24 மணி நேர நேரலை ஒளிபரப்பையும் பார்க்கலாம்.

summary

Bigg boss 10 tamil Raghav leaves the Bigg Boss house for surgery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments