ஷாதிகாவிடம் வன்மம் தீர்த்த லட்சுமி பிரியா! அனல் பறக்கும் பிக் பாஸ்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷாதிகா மீது இருந்த பல நாள் வன்மத்தை லட்சுமி பிரியா தீர்த்துக்கொண்டதாக ரசிகர்கள் பலர் கருத்து...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷாதிகா மீது இருந்த பல நாள் வன்மத்தை லட்சுமி பிரியா தீர்த்துக்கொண்டதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
லட்சுமி பிரியாவும் ஷாதிகாவும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பு இருந்தே நல்ல நண்பர்களாக இருந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருவருக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
Advertisement
Advertisement
இதனால் இருவரும் சற்று விலகியே பயணித்து வந்த நிலையில், இன்று வைத்த போட்டியில் தன் மனதில் இருந்த மொத்த கேள்விகளையும் லட்சுமி பிரியா கேட்டுவிட்டார். இதனால் ஷாதிகா சற்று அதிருப்தி அடைந்த காட்சிகள் புரோமோவில் இடம் பெற்றுள்ளன.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பில்டப் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதற்கேற்றவாறே போட்டிகளும் வைக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவது நாளான இன்று கடவுள் பாதி மிருகம் பாதி போட்டி வைக்கப்பட்டது.
அதாவது தலையில் கிரீடத்துடன் மேடையில் அமரும் போட்டியாளரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை தாராளமாக எந்தவித ஒளிவு மறைவுமின்றி கேட்கலாம். அதற்கு மேடையில் அமர்ந்திருக்கும் போட்டியாளர் சிரித்துக்கொண்டே சீராக பதில் அளிக்க வேண்டும் என்பதே போட்டி.
இப்போட்டியில் கிரீடத்துடன் மேடையில் அமர்ந்த ஷாதிகாவிடம் லட்சுமி பிரியா சில கேள்விகளை எழுப்பினார்.
கேப்டன் ஆகிவிட்ட பிறகு எதற்கு கம்ஃபோர்ட் ஸோன் உங்களுக்கு தேவைப்படுகிறது? தனியாக விளையாட முடியாதா? பயமாக இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஷாதிகா, ’எனக்கு இங்கு வசதியான சூழல் தேவைப்படவில்லை. அது தானாகவே அமைந்தது. அதனை நான் ஏற்றுக்கொண்டேன். அவ்வளவுதான்’ என்றார்.
’அமைந்த வசதியான சூழலை ஏன் வெட்டிவிட்டீர்கள்’ என லட்சுமி பிரியா கேட்டார். ’’நான் எங்கு வெட்டிவிட்டேன் என ஷாதிகா பதில் அளித்தார். ’அதுதான் நான் இருக்கேனே, என்னை வெட்டிவிட்டீர்களே’! என லட்சுமி பிரியா பேசினார்.
’உங்களை சுற்றி ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு என்னிடம் வந்து பேசுங்கள் என்று கூறினால், என்னால் எப்படி வந்து உன்னிடம் பேச முடியும். உன்னை தோழியாகப் பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. அது முடிந்தும் விட்டது’ என லட்சுமி பிரியா கூறினார்.
இது தொடர்பாக புரோமோ விடியோவும் வெளியாகியுள்ளது. இதில் பலர், ஷாதிகா மீது இருந்த வன்மத்தை லட்சுமி பிரியா வெளிக்காட்டிவிட்டதாகவும், ஷாதிகாவுக்கு தக்க பாடத்தை லட்சுமி பிரியா புகட்டியுள்ளதாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.