பிக் பாஸில் ஜேசன் காட்சிகள் நீக்கம்! ஜேசனை புறக்கணிக்கிறதா விஜய் டிவி?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜேசனின் காட்சிகள் இடம்பெறாதது குறித்து...

ஜேசன் கெளசி - எக்ஸ்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஜேசன் கெளசியின் காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லை என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
12 வது வாரத்தின் இரண்டாவது நாளில் இந்த வாரத்துக்கான முதல் போட்டி வைக்கப்பட்டது. பில்டப் டாஸ்கின் முதல் சுற்றில் பேருந்தில் இருந்து சக போட்டியாளர்களை காப்பாற்றி தூக்கிக்கொண்டு வந்து கார்டனில் படுக்க வைக்க வேண்டும் என்பதே போட்டி.
இதில் போட்டியாளர்கள் தங்களின் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர். பிக் பாஸ் வீட்டில் அனைத்துப் போட்டியாளர்களின் ஆட்டமும் ஒளிபரப்பப்பட்டது. ஆனால், ஜேசன் கெளசி விளையாடிய ஆட்டத்தின் ஒரு பகுதி கூட ஒருமணி நேர ஒளிபரப்பில் இடம்பெறவில்லை.
நேரலையில் மட்டுமே ஜேசன் கெளசி விளையாடியது இடம்பெற்றிருந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒருமணி நேர எபிஸோடில் ஜேசன் விளையாடியது இடம்பெறவில்லை.
இதனால் ஜேசனை பிக் பாஸ் நிகழ்ச்சி புறக்கணிப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தொகுப்பாளர் விஜய் சேதுபதியிடம் மரியாதை குறைவாகப் பேசிவிட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீடிக்க விருப்பமில்லை என ஜேசன் கூறியிருந்தார்.
ஆனால், அதனை பெரிதாக்க விரும்பாத விஜய் சேதுபதி உங்கள் ஆட்டத்தை தொடர விரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றார்.
இதனால் பிக் பாஸ் குழுவினர் அதிருப்தி அடைந்திருக்கலாம் என்றும் அதனால் ஜேசனின் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அவரின் ஆட்டம் முன்பு போல இல்லை என்பதால், சமீபத்தில் வரும் புரோமோ விடியோக்களிலும் ஜேசன் இடம்பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


