FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிக் பாஸ் 10: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்து...

20 செப்டம்பர் 2026, 11:18 am IST
பிக் பாஸ் 10 முன்னோட்டக் காட்சி. - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்
பகிர்:

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. விஜய் சேதுபதியே இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சவின்யா, குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார் ஆகிய 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.

Advertisement

Advertisement

இதனிடையே, நடிகர் பிளாக் பாண்டிக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களால் சவின்யா தேர்ந்தெடுக்கப்பட்டு, நிகழ்ச்சியில் இருந்து அனுப்பப்பட்டார்.

கடந்த வெள்ளிக் கிழமை, வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜாவித் வெளியேறினார்.

இந்த வார நாமினேஷுனுக்கு அஸ்மிதா, அவினாஷ், சாந்தினி, ஜேசன், குமரன், லஷ்மி பிரியா, மணிவண்ணன், பிருத்வி, வினோத் பாபு ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர்

இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மக்கள் வாக்களித்தனர், இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற மணிவண்ணன், பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

summary

Information regarding which contestant was evicted from the Bigg Boss show this week has been revealed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments