பிக் பாஸ் 10: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இருவர் வெளியேறிய இருவர் யார் என்பது குறித்து...
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, 4வது வாரத்தை எட்டியுள்ளது.
இதனிடையே, எதிர்பாராத திருப்பமாக லீடர் எவிக்ஷன் புராசஸில் வெளியேறிய லட்சுமி பிரியா, ஜாவித், சவின்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகைத் தந்தனர்.
Advertisement
Advertisement
இவர்கள் மூவரும் ஏற்கெனவே வீட்டிலிருக்கும் மோசமாக விளையாடும் ஒரு போட்டியாளரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை கயிறு மூலம் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, லட்சுமி பிரியா, குமரனுடன், சவின்யா, அஸ்மிதாவுடன், ஜாவேத் ஷெரிப், தன்யாவுடன் இணைக்கப்பட்டனர். இந்த ஆறு போட்டியாளர்களில் மூவர் மட்டுமே, இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் போட்டியாளர்கள் பட்டியலில் இவர்கள் 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், ரூ. 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நடிகர் குமரன் வீட்டைவிட்டு வெளியேறினார். இதனால், லட்சுமி பிரியா காப்பாற்றப்பட்டார்.
சவின்யா, அஸ்மிதா, ஜாவேத் ஷெரிப், தன்யா ஆகிய நான்கு பேரில், மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற சவின்யா, ஜாவேத் ஷெரிப் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Two contestants have been evicted from Bigg Boss Season 10 this week.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.