நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போஸ்டர் 
செய்திகள்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி!

தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் உருவாகி வருகிறது.

தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பாரா பாடல் வெளியானதிலிருந்து பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

படத்தின் அடுத்த பாடலான காதல் ஃபெயில் பாடல் விரைவில் வெளியாகிறது.

இந்த நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வருகிற பிப்.7ஆம் தேதி திரைக்கு வருமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வெளியிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT