மோசமான 3 குரங்குகள் வதந்திகளை பேசி பணம் சம்பாதிக்கிறார்கள்: நயன்தாரா குற்றச்சாட்டு
நடிகை நயன்தாரா தன்னைக் குறித்து அவதூறாக பேசி பணம் சம்பாதிக்கும் யூடிப்பர்களை விமர்சித்து பேசியுள்ளார்.
நடிகை நயன்தாராவின் 40-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருமண காட்சிகளுடன் அவர்களது காதல் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது.
இதில் நானும் ரௌடிதான் படக்காட்சிகள், பாடலை பயன்படுத்த நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் வேண்டுமென்றே அனுமதி வழங்கமால் காலம் தாழ்த்தியதாக நயன்தாரா 3 பக்கம் கடிதம் வெளியிட்டிருந்தார்.
இது குறித்து யூடியூப்பில் நயன்தாராவுக்கு எதிராகவும் தனுஷுக்கு ஆதராவகாவும் சில யூடியூப்பர்கள் பேசினார்கள்.
Advertisement
Advertisement
நேர்காணல் ஒன்றில் நடிகை நயன்தாரா இது குறித்து பேசியதாவது:
யூடியூப்பில் 3 நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு 50 எபிசோடுகள் வெளியிட்டால் அதில் 45 என்னைக் குறித்ததாகவே இருக்கும். ஏனென்றால் என்னைக் குறித்து பேசினால் அதிகமான பார்வைகள் கிடைத்து அதனால் பணம் சம்பாதிக்கிறார்கள். என்னை வைத்து அல்லது எனது பெயரினால் மற்றவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்.
வதந்திகளை மட்டுமே பேசி அந்த மூவர் பணம் சம்பாதிக்கிறார்கள். நான் அவர்களை தேவையில்லாமல் பிரபலம் ஆக்குகிறேன்.
நாம் 3 குரங்குகள் குறித்து கேள்வி பட்டிருக்கிறோம். பொய் பேசாது, தவறானதை கேட்காது, தவறானதை பார்க்காது. ஆனால், இந்த 3 குரங்குகள் அதற்கு எதிராக இருக்கும். பொய் மட்டுமே பேசும், தவறானதை மட்டுமே கேட்கும், தவறானதையே பார்க்கும்.
பேச்சு என்று பெயர் வைத்திருப்பார்கள். அவர்கள் சரியான கோமாளிகள். அவர்கள் அங்கேயேதான் இருப்பார்கள். ஆனால், என்னைக் குறித்து அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது போலவே பேசுவார்கள் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.