செய்திகள்

பிக் பாஸ் 8: முதல்முறையாக... ரஞ்சித்துக்கு எதிராக மாறிய ஜெஃப்ரி!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித்துக்கு எதிராக ஜெஃப்ரி பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித்துக்கு எதிராக ஜெஃப்ரி பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படும் நபர்களில் ரஞ்சித்தும் ஒருவராக உள்ளார். பிக் பாஸ் வீட்டில் அவருக்கு எதிராகப் பேசுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இதனிடையே தற்போது போட்டியின்போது ஜெஃப்ரி, ரஞ்சித்துக்கு எதிராகப் பேசியுள்ளார். ஜெஃப்ரிக்கு மிகவும் நெருக்கமான நபர்களில் ரஞ்சித்தும் ஒருவாக இருந்துவருவதாக ரசிகர்கள் கருதும் நிலையில், ஜெஃப்ரி பேசும் விடியோ அதிர்ச்சியை அளித்துள்ளது.

சச்சரவில் போட்டி

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 73வது நாளை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கு வி.ஜே. விஷால் கேப்டனாக தேர்வாகியுள்ளார். இந்த வாரத்திற்கு கற்கள் வைத்து வீடு கட்டும் போட்டி பிக் பாஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் ஒரு அணிக்கு தலா 3 பேர் தேர்வு செய்து விளையாடிவருகின்றனர். இந்த விளையாட்டின்போது ரஞ்சித் அணியிடம் இருந்த கற்களை ஜெஃப்ரி லாவகமாக எடுத்துவந்து தனது வீடு கட்டுவதற்கு பயன்படுத்துகிறார்.

இதுபோன்று மற்ற அணியினரும் மாற்று அணியின் கற்களை எடுத்துவந்து தனது வீடு கட்ட பயன்படுத்துகின்றனர்.

ரஞ்சித் - ஜெஃப்ரி வாக்குவாதம்

ரஞ்சித் - ஜெஃப்ரி வாக்குவாதம்

ரஞ்சித் அணியின் கற்களை எடுத்த ஜெஃப்ரியிடம் ரஞ்சித் அணியில் உள்ள ஜாக்குலின், ரயான் உள்ளிட்டோர் முறையிடுகின்றனர். ரஞ்சித்தும் ஜெஃப்ரியிடம் கற்களை எடுத்து ஏன் உன் அணியில் வைத்தாய் எனக் கேட்கிறார்.

கற்களை எடுத்து தங்கள் கட்டியிருந்த வீட்டின் உள்ளே வைத்துவிட்டதாகவும், வெளியே இருந்திருந்தால் கொடுத்திருப்பதாகவும் ஜெஃப்ரி கோபத்துடன் பதில் அளிக்கிறார்.

’சரிதான் ஜெஃப்ரி, நீ செய்தது சரிதான்’ என ரஞ்சித் கைகூப்பி மன்னிப்பு கேட்பதைப் போன்று பேசுகிறார்.

ஜாக்குலினும் ரயானும் ஜெஃப்ரி அணியைச் சேர்ந்த அன்ஷிதாவிடம் முறையிடுகின்றனர். ஆனால், அன்ஷிதாவும் ஜெஃப்ரிக்கு ஆதரவாகப் பேசுவதால், வாக்குவாதம் பெரிதாகிறது.

அப்போது குறுக்கிடும் இந்த வார கேப்டன் வி.ஜே. விஷால், இரு அணியினரையும் அமைதிகாக்குமாறு கேட்கிறார். ஆனால், ஜாக்குலின் இதற்கு மறுப்பு தெரிவித்து, அன்ஷிதாவிடம் பொறுமையாகப் பேசும் நீ, என்னிடம் ஏன் குரலை உயர்த்திப் பேசுகிறாய் என கேப்டனிடம் கேள்வி எழுப்புகிறார்.

இதனால் வீடு கட்டும் இரண்டாம் நாள் போட்டியும் சச்சரவிலேயே முடிந்துள்ளது.

இதையும் படிக்க | சிவகார்த்திகேயனாக ஆசைப்படும் முத்துக்குமரன்: ஹீரோயின் செளந்தர்யா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT