ஸ்ரீதேவி, ராம் கோபால் வர்மா  கோப்புப் படங்கள
செய்திகள்

ஸ்ரீதேவியை கைது செய்வார்களா? ராம் கோபால் வர்மா கேள்வி!

சொர்க்கத்துக்குச் சென்று ஸ்ரீதேவியை கைது செய்வார்களா என இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ளார்.

DIN

சொர்க்கத்துக்குச் சென்று ஸ்ரீதேவியை கைது செய்வார்களா என இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ளார்.

டிச.4ஆம் தேதி புஷ்பா 2 படத்தினை காண சந்தியா திரையரங்கம் வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை பலியான விவகாரத்தில் தெலங்கானா உயா்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனின் ஆவணங்கள் முழுமையாக கிடைக்காததால் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.13) இரவு முழுவதும் சிறையிலேயே கழித்த நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்தநாள் (டிச.14) சிறையிலிருந்து வெளியே வந்தார்.

அல்லு அர்ஜுன் கைதுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குநரும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவராகவும் இருக்கும் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.

புகழ்பெற்றது ஒரு குற்றமா?

ராம் கோபால் வர்மா கூறியதாவது:

அனைத்து நடிகர்களும் அல்லு அர்ஜுன் கைதுக்கு வலுவாக போராட வேண்டும். ஏனெனில், அரசியல் அல்லது சினிமா என எந்த பிரபலமாக இருந்தாலும் அவர்கள் அளவுக்கு அதிகமாக புகழ்பெற்றது ஒரு குற்றமாக கருத முடியுமா?

எனது படம் க்‌ஷண க்‌ஷணம் படத்தின் படப்பிடிப்பில் ஸ்ரீதேவியைப் பார்க்க லட்சக்கணக்கான மக்கள் வந்தபோது மூவர் உயிரிழந்தனர். அதனால், தெலங்கானா காவல்துறை தற்போது சொர்க்கத்துக்குச் சென்று ஸ்ரீதேவியை கைது செய்வார்களா? எனக் கேள்வி கேட்டுள்ளார்.

போஸ்டர்.

1991ஆம் ஆண்டு க்‌ஷண க்‌ஷணம் வெளியானது.. இதில் வெங்கடேஷ், பரேஷ் ரவல், ரமி ரெட்டி, ஸ்ரீ தேவி நடித்திருப்பார்கள்.

கவலைக்கிடத்தில் சிறுவன்

அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து வெளியே வந்துபோது அவரது மனைவி, குழந்தை பாசத்தோடு வந்தழைத்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

சமூக வலைதளங்களில் அல்லு அர்ஜுனுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

அல்லு அர்ஜுன் புஷ்பா படத்துக்காக தேசிய விருது வென்றார். தற்போது, புஷ்பா 2 படம் ரூ.1,500 கோடி வசூலித்துள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் மகன் (9) ஸ்ரீதேஜ் பிஐசியூவில் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் வழக்கின் காரணமாக அந்தச் சிறுவனை சந்திக்க முடியவில்லை எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT