அருண் பிரசாத் படம் | எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 8: தீபக் மனைவியின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த அருண்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், தீபக் மனைவி எழுப்பிய கேள்விகளால் அருண் அதிர்ச்சி அடைந்தார்.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், தீபக் மனைவி எழுப்பிய கேள்விகளால் அருண் பிரசாத் அதிர்ச்சி அடைந்தார்.

தீபக் குறித்து அவருக்குத் தெரியாமல் பேசிய விஷயங்களைக் குறிப்பிட்டு, அவரின் மனைவி கேட்ட கேள்விகளால் அருணின் உண்மை முகத்தை சக போட்டியாளர்களுக்கு காட்டினார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12 வது வாரத்தை எட்டியுள்ளது. போட்டி முடிய இன்னும் சில வாரங்களே உள்ளதால், போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முதல் நபராக தீபக் வீட்டில் இருந்து அவரின் மனைவி, மகன் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர்.

காலையிலேயே ஸ்டோர் ரூம் வழியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற தீபக்கின் மனைவியும் மகனும் நேராக படுக்கை அறைக்குச் சென்று தீபக்கின் அருகில் படுத்துக்கொண்டனர். பின்னர் தீபக் கண் விழித்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார்.

பின்னர் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுக்கு தீபக் தனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

தீபக்கின் மனைவி, உங்களை நினைத்து பெருமையின் உச்சத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். இதேபோன்று அவரின் மகனும் தந்தை தீபக்கை நினைத்து பெருமையடைவதாகக் கூறினார்.

தீபக் மனைவியின் கேள்வி

இதைத் தொடர்ந்து தீபக் மனைவிக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் எந்தப் போட்டியாளரின் கருத்தில் உங்களுக்கு முரண்பாடு இருக்கிறது என்பதை தெரிவிக்குமாறு கூறினார்கள்.

அப்போது சிறிது நேரம் யோசித்து அருண் பிரசாத் என்று கூறினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீபக் உடன் சண்டையிட்டு வெளியே சென்று சத்யாவிடம் சொன்ன வார்த்தை தன்னை மிகவும் காயப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

அதாவது, தீபக் உடனான சண்டைக்கு பிறகு சத்யாவிடம் பேசும்போது ’நான் இப்போ ட்ரெண்டில் இருக்கிற ஹீரோ, என்கிட்டயே இவர் இப்படி நடந்துக்கிறாரே.. அப்போ அவர் ட்ரெண்டிங்கில் இருக்கும்போது அவருடைய அசிஸ்டன்ட் கிட்ட எப்படி நடந்து இருப்பார்?’ என்று பேசியிருந்தார். அது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக தீபக் மனைவி குறிப்பிட்டார்.

உங்களுக்கு தீபக் பற்றி தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது. அவர் யாரையும் அப்படித் தவறாக நடத்தி நீங்கள் பார்த்ததில்லை.

நீங்கள் யூகித்து சொன்ன ஒரு விஷயம்தான் அது. எனக்கு அது அவரை கொச்சைப்படுத்தும் செயலாக இருந்தது என தீபக்கின் மனைவி சக போட்டியாளர்கள் முன்பு சொன்னதால், அருண் அதிர்ச்சி அடைந்தார்.

இதையும் படிக்க | பெருமையின் உச்சத்தில் தீபக் குடும்பம்! பிக் பாஸில் ஆனந்தக் கண்ணீர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT