புஷ்பா 2 
செய்திகள்

காவல்துறையினரை இழிவுபடுத்துவதா? புஷ்பா 2 படக்குழு மீது காங்கிரஸ் புகார்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது தெலங்கானா காங்கிரஸ் மேலவை உறுப்பினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

DIN

புஷ்பா 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் காவல்துறையினரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினரான தீன்மர் மல்லன்னா புஷ்பா 2 படத்தின் காட்சிகள் காவல்துறையினரை இழிவுபடுத்தும் விதத்தில் இருப்பதாக ரச்சகொண்டா பகுதி காவல்துறையில் நேற்று (டிச. 23) புகார் அளித்தார்.

காவல்துறையில் புகார் அளிக்கும் தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் தீன்மர் மல்லன்னா

புஷ்பா 2 படத்தின் குறிப்பிட்ட சில காட்சிகளில் காவல்துறையினரை தவறாக சித்தரித்து, ஐபிஎஸ் அதிகாரி இருக்கும் நீச்சல் குளத்தில் நாயகன் சிறுநீர் கழிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது காவல்துறையினரை அவமதித்ததாகக் குறிப்பிட்டு படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இத்தகைய காட்சிகள் மக்களுக்கு அரசு நிர்வாகம் மீது நம்பிக்கை இழக்கச்செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தக் காட்சிகளைப் படத்தில் இருந்து நீக்கி படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT