சல்மான் கான், சிவகார்த்திகேயன். 
செய்திகள்

சிக்கந்தரால் எஸ்கேவுக்கு சிக்கல்?

சிக்கந்தர் மற்றும் எஸ்கே - 23 படம் குறித்து..

DIN

சிக்கந்தர் பட வேலைகளால் சிவகார்த்திகேயன் படத்தின் வேலைகள் தாமதமாகி வருகின்றன.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அதிலொன்று சிவகார்த்திகேயனின் 23-வது படம். இந்தப் படத்தில் துப்பாக்கியில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, திடீரென நடிகர் சல்மான் கானின் புதிய படத்தை இயக்க ஏ. ஆர். முருகதாஸ் மும்பை சென்றார்.

இதனால், சில வாரங்கள் எஸ்கே - 23 படத்தின் படப்பிடிப்பு நிகழாமல் இருந்தது. பின், மீண்டும் சில நாள்கள் நடைபெற்றது. இறுதியாக, இன்னும் இரண்டு வாரங்களில் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளதால் இதை முடித்ததும் சிக்கந்தர் படத்திற்கு வருகிறேன் என ஏ. ஆர். முருகதாஸ் சொல்ல நடிகர் சல்மான் கான் மறுத்திவிட்டாராம்.

காரணம், சிக்கந்தர் அடுத்தாண்டு ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளதால் அத்தேதிக்கு முன் படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதில் சல்மான் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் திரைப்படம் அடுத்தாண்டு கோடை வெளியீடாகத்தான் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரும்புக் கை மாயாவி திட்டத்தில் லோகேஷ் கனகராஜ்?

மு.க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு!

விமலின் மகாசேனா டிரைலர்!

நேரு குறித்த ராஜ்நாத் சிங்கின் கருத்து திசைதிருப்பும் முயற்சி! பிரியங்கா காந்தி

“Yes To Labour Justice” நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் போராட்டம்! | Congress | Bjp

SCROLL FOR NEXT