செய்திகள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் தனுஷ் - இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ஆக்சன் பாணியில் உருவான கேப்டன் மில்லர் பொங்கல் வெளியீடாக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  

ஆலய நுழைவுப் போராட்டம், அதிகாரத்துக்கு எதிரான புரட்சி என உருவான இப்படம்  நேற்று (ஜன.12) பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. 

கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாள் வசூலாக உலகளவில் ரூ.17 கோடி  வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. தொடர்ந்து, தெலுங்கில் வெளியானது.

இப்படம் உலகளவில் ரூ.105 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ரூ.50 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் பிப்.9ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT