வெளியானது லவ்வர் படத்தின் 7 பாடல்கள்!
நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் படத்தின் மொத்த பாடல்கள் வெளியாகியுள்ளன.
காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது, மணிகண்டன் 'லவ்வர்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதில் கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இதையும் படிக்க: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த குறிச்சி மடதாபெட்டி பாடல்!
Advertisement
Advertisement
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வருகிற பிப்.9 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பொறுப்பற்ற இயக்குநர் ஷங்கர்: ராம் சரண் ரசிகர்கள் விமர்சனம்!
இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் மொத்த பாடல்கள் லிரிக்கல் விடியோவாக வெளியாகியுள்ளன. மொத்தம் 7 பாடல்கள் இருக்கின்றன. மோகன் ராஜன், ஷான் ரோல்டன் பெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளார்கள்.
ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், சித்தார்த் போன்ற பிரபலங்கள் பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.