செய்திகள்

தனுஷ் - 50 படத்தின் பெயர் இதுவா?

நடிகர் தனுஷின் 50-வது படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தனுஷ், வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்கிறார். இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

தற்போது, இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்திற்கு ‘காத்தவராயன்’ எனப் பெயரிட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் சிவாஜி, கரண் இருவரும் ‘காத்தவராயன்’ என்கிற பெயர் கொண்ட படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிசோரமில் புதிய ரயில் பாதை: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

காஞ்சனா 4 படத்தினால் வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றிய ராகவா லாரன்ஸ்!

ராமரைப் பின்பற்றாத ஸ்டாலினுடன் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஏன்? அனுராக் தாக்குர்

செப். 17 முதல் உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்!

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ. 88.3 லட்சம் சன்மானம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT