செய்திகள்

தள்ளிப்போகிறதா தங்கலான்?

தங்கலான் வெளியீடு மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதில், இடம்பெற்ற விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படம், ஜனவரி 26-ல் வெளியாக இருந்தது. ஆனால், படத்தின் பணிகள் திட்டமிட்டபடி முடியாததால் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தங்கலான் தேர்தலுக்குப் பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பணிகளும் இன்னும் முடிவடையதாததால் திட்டமிட்டபடி வெளியீட்டுத் தேதியையும் அறிவிக்கவில்லை. 

நடிகர் விக்ரம் தற்போது, சு. அருண்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

”விஜய்யுடன் சேர முயற்சித்த காங்கிரஸ்! முடியாமல்தான் திமுகவுடன் இருக்கிறார்கள்!” நயினார் நாகேந்திரன்

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

SCROLL FOR NEXT