செய்திகள்

100 நாள்களைக் கடந்த நள தமயந்தி தொடர்! மகிழ்ச்சியில் ரோஜா நடிகை!!

திருமணத்திற்காக சீதா ராமன் தொடரிலிருந்து விலகிய பிரியங்கா, நளதயமந்தி தொடர் மூலம் மறுபடியும் நடிக்க வந்துள்ளார்.

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நள தமயந்தி தொடர் 100 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகியுள்ளது. 100வது நாளை நளதமயந்தி குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 

இது தொடர்பான புகைப்படங்களை நள தயமந்தி குழுவினர் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நள தயமந்தி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை பிரியங்கா நல்காரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர் ரோஜா தொடரில் பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்தவர். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீத ராமன் தொடரில் நடித்தார். 

திருமணத்திற்காக சீதா ராமன் தொடரிலிருந்து விலகிய பிரியங்கா, நள தயமந்தி தொடர் மூலம் மறுபடியும் நடிக்க வந்துள்ளார். இதனால் நள தயமந்தி தொடருக்கு ஆரம்பக்கட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 

இந்த எதிர்பார்ப்பின் காரணமாக நள தமயந்தி தொடர் பலதரப்பட்ட மக்களிடம் சென்று சேர்ந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், முதன்மை டிஆர்பி பெறும் தொடர்களின் பட்டியலில் ஒன்றாக நள தயமந்தி உள்ளது. 

நள தமயந்தி போஸ்டர் வடிவில்.. 100வது நாள் வெற்றிக் கொண்டாட்ட கேக்

நள தயமந்தி தொடரில் பிரியங்கா நல்காரிக்கு ஜோடியாக நடிகர் நந்தா நடிக்கிறார். அம்மாவின் பெயரில் உணவகம் நடத்திவரும் நடுத்தரக் குடும்பத்து பெண்ணுக்கும், உணவுத் துறையில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் ஆணுக்கும் இடையிலான உறவை நளதயமந்தி தொடரின் திரைக்கதை.

இந்தத் தொடர் தற்போது 100 நாள்களை வெற்றிகரமாகக் கடந்து ஒளிபரப்பாகியுள்ளது. இதனை குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 

நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலர் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT