செய்திகள்

நான் சுமாரான கதைகளில் நடிப்பதில்லை: விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் தான் சுமாரான படங்களில் நடிக்க விரும்புவதில்லை எனக் கூறியுள்ளார். 

DIN

நடிகர் விஷ்ணு விஷால் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009-ல் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதும் துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி ஆகிய படங்களில் நடித்து தொடர் வெற்றியைப் பெற்றார்.

அதன்பின், ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நாயகன் என்கிற பெயரைப் பெற்றார். நல்ல படங்களைக் கொடுக்கும் நடிகராகவும் இன்று அறியப்படுகிறார். இறுதியாக வெளியாக கட்டாகுஸ்தி வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நாளை (பிப்.9) லால் சலாம் படம் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஷ்ணு விஷால், “நான் ஒரு கதையை கேட்கும்போது முழுக்கதையையும் கேட்கிறேன். கதை, கதாபாத்திரம் குறித்து அதிகமன கேள்விகளை கேட்கிறேன். அதனால் பல இயக்குநர்களுக்கு என்னைப் பிடிப்பதில்லை. துணைக் கதாபாத்திரங்களில் நடிப்பதில் விருப்பமில்லை. நாயகனாக மட்டுமே நடிக்க விருப்பம். இதனால் பல படங்களை புறக்கணித்துள்ளேன்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனக்கு 5 மணி நேரம் கதையைக் கூறினார். ரஜினி சார் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கும். எனக்கும் இருக்கிறது. 

எனது படங்களில் 72 சதவித படங்கள் வசூல் ரீதியாக நல்ல வசூலீட்டியுள்ளது. இன்னும் இந்த சதவிகிததினை உயர்த்த நினைக்கிறேன்.  இதனால் நான் ஈகோ அல்லது திமிர் பிடித்தவனில்லை. நான் சுமாரான கதைகளில் நடிக்கவும் தயாரிக்கவும் விரும்புவதில்லை. நல்ல கதைகளில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன் அவ்வளவுதான். அது என்னை, என் தயாரிப்பாளர்களை, விநியோகஸ்தர்களை மகிழ்விக்கும்படியாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் வியாபரத்துக்கு பணம் முக்கியமானது” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

SCROLL FOR NEXT