செய்திகள்

மிஷன் ஓடிடியில் எப்போது?

அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN


முறை மாப்பிள்ளை  படத்தின்  மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார். தற்போது, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மிஷன் சேப்டர்-1  ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கடந்த ஜன.12 ஆம் தேதி உலகளவில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் படமானது. வசூல் ரீதியாகவும் ரூ.30 கோடி வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் வருகிற பிப்.16 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT