செய்திகள்

தாயாகிறார் நடிகை யாமி கௌதம்! 

பிரபல பாலிவுட் நடிகை யாமி கௌதம் 5 மாதங்கள் கர்ப்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஹிமாச்சலில் பிறந்த நடிகை யாமி கௌதம் முதலில் மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். 

தற்போது ஹிந்தியில் முழுநேர நடியாக இருந்து வருகிறார். தனது முதல் ஹிந்தி படமான விக்கி டோனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். 

தமிழில் 2013இல் கௌரம் எனும் படத்திலும் 2016இல் ஜெய் உடன் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பெரிதாக ஹிட் அடிக்காத இவரது படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. 

யாமி கௌதம், ப்ரியா மணி இணைந்து நடித்துள்ள ஆர்டிகள் 370 திரைப்படம் பிப்.23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை தயாரித்துள்ளார் யாமி கௌதமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2019இல் உரி- தி சர்ஜிகல் ஸ்டிரைக் படத்தினை இயக்கிய ஆதித்யா தார் படத்தில் நடித்தார். அங்கு ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்து 2021-இல் திருமணத்தில் முடிந்தது. 

இந்நிலையில் நடிகை யாமி கௌதம் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் மே மாதம் குழந்தை பிறக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து தயாரிப்பாளரும் யாமி கௌதமின் கணவருமான ஆதித்யா தார், “இது லட்சுமியா அல்லது கணேஷா என்பது தெரியவில்லை. ஆவலுடன் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதயநிதிக்கே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் பொருள் சரியாகத் தெரியவில்லை: தமிழிசை

அக்டோபரில் உச்சம் தொட்ட கார்கள் விற்பனை!

மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் பலி

எங்களிடம் அது இல்லையா? மாரி செல்வராஜைக் கேள்விகேட்ட நடிகை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

SCROLL FOR NEXT