செய்திகள்

வாழ்க்கையை மாற்றிய நாள்: நடிகர் கவினின் நெகிழ்ச்சியான பதிவு!

நடிகர் கவின் நடித்த டாடா திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவையொட்டி நெகிழ்ச்சியான பதிவினைப் பதிவிட்டுள்ளார். 

DIN

ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு இயக்கிய ’டாடா’ படத்தில் நடிகர் கவின் நடித்திருந்தார்.

மேலும் அபர்ணாதாஸ் நாயகியாக நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

2023, பிப்.10 ஆம் நாள் வெளியான போஸ்டர்

திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 

தற்போது ஸ்டார் எனும் படத்தில் நடித்து வருகிறார். டாடா வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் கவின் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கவின் கூறியதாவது: 

வாழ்க்கையை மாற்றும் உணர்ச்சிகரமான டாடா எங்கள் வாழ்வில் வந்ததை ஒரு வருடத்துக்கு முன்பான இந்நாள் பிரதிபலிக்கிறது. இந்தப் பயணத்துக்கு மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். இனி மேலும் கனவுகளை துரத்தி அற்புதங்களை நிகழ வைக்கவேண்டும்! எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நவ. 6-இல் வாக்குப்பதிவு: பிரசாரம் முடிவு!

ஐஸ் குல்பி... சாக்‌ஷி மாலிக்!

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’? வாக்குப்பதிவு தொடங்கியது!

சினேகிதியே... அதுல்யா ரவி!

SCROLL FOR NEXT