முகப்பு
செய்திகள்

இலங்கை அகதிகளாக சசிகுமார், லிஜோமோல்! 

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோ மோல்  இலங்கை அகதிகளாக நடித்துள்ளார்கள். 

Updated On : 10 பிப்ரவரி, 2024 at 4:22 PM
பகிர்:

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’ எனப் பெயரிட்டுள்ளனர். 

நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். விஜய கணபதி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

இதில் கேஜிஎஃப் புகழ் மாளவிகா அவிநாஸ், போஸ் வெங்கட், மு.ராமசாமி, சரவணன் ஆகியோர் நடித்துள்ளார்கள். மலையாள நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடித்துள்ளார். 

Advertisement

படம் குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் சத்யசிவா கூறியதாவது: 

தமிழகத்தில் 1990களில் நடந்த ஜெயில் உடைப்பு குறித்த உண்மைக் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கழுகு படத்தைத் தவிர எனது வேறெந்த படங்களும் சரியாக வரவேற்பு கிடைக்கவில்லை. 

இந்தப்படம் எனக்கு திருப்புமுனையாக அமையும். ஜிப்ரானின் பாடல்கள் குறிப்பிடும்படியாகவிருக்கும். ஜெய் பீம் படத்தில் லிஜோ மோல் சிறப்பாக நடித்ததால்தான் இதில் தேர்வு செய்தேன். நான் மிருகமாய் மாற (2022) படத்தின்போதே சசிகுமார் சாரிடம் இந்தக் கதையைக் கூறினேன். அபோதே அவர் இதைப் பண்ணுவோம் எனக் கூறினார். 

சமீபத்தில் இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. விரைவில் படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.