செய்திகள்

வேட்டையன் படப்பிடிப்பு 80% முடிவடைந்தது: நடிகர் ரஜினி தகவல்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக ரஜினியே தெரிவித்துள்ளார். 

DIN

ஜெயிலர் படத்தின் வெற்றியைதைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர். 

தூத்துக்குடி மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் நடந்த முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

லால் சலாம் திரைப்படம் மக்களுக்கு பிடித்துள்ளதாக சொல்கிறார்கள். மிகப் பெரிய வெற்றியடைந்திருந்திருக்கிறது. இதனைத் தயாரித்த லைகா புரடக்‌ஷனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் வாழ்த்துகள். லால் சலாம் படக்குழுவுக்கும் வாழ்த்துகள். வேட்டையன் படம் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. 20 சதவிகிதம் இன்னும் மீதமிருக்கிறது. அடுத்தப்படம் லோகேஷின் படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாமென ரஜினி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT