ரசிகரைத் தாக்கி செல்போனை தூக்கி எறிந்த பிரபல பாடகர்!
பாடகர் உதித் நாராயண் மகனும் பாடகருமான ஆதித்யா நாராயண் ரசிகரைத் தாக்கியது அதிர்ச்சியளித்துள்ளது.
இந்திய அளவில் புகழ்பெற்ற பாடகர் உதித் நாராயண். இவர் தமிழில், ’சோனியா சோனியா’, ‘காதல் பிசாசே’, ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’ உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மகன் ஆதித்யா நாராயணும் பாடகராக இருக்கிறார். ஹிந்தியில் முக்கியமான பாடகராகவும் அறியப்படுகிறார்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆதித்யா நாராயணின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஷாருக்கானின் பட பாடல் ஒன்றைப் பாடியபோது ரசிகர் ஒருவர் தன் செல்போனால் ஆதித்யாவின் காலைத் தட்டி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், இதனால் ஆத்திரமடைந்த ஆதித்யா நாராயண் தன் ஒலி வாங்கியால் ரசிகரை அடித்ததுடன் அவரின் செல்போனைப் பறித்து கூட்டத்தில் தூக்கி வீசினார். இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
Advertisement
Advertisement
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஆதித்யாவின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, “ஆதித்யா தன் தந்தையின் பெயரையும் புகழையும் கலங்கப்படுத்துகிறார்” என்றும் “இதுவே எங்கள் கல்லூரியில் நிகழ்ந்திருந்தால் ஆதித்யா நாராயணின் மொத்த குழுவும் அடி வாங்கித்தான் சென்றிருப்பார்கள்” போன்ற பின்னூட்டங்களும் குவிந்து வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.