செய்திகள்

19 வயதில் மறைந்த தங்கல் பட நடிகை!

ஆமிர் கானின் தங்கல் படத்தில் நடித்த நடிகை 19 வயதில் காலமாகியுள்ளார்.

DIN

ஆமிர் கானின் தங்கல் படத்தில் நடித்த நடிகை 19 வயதில் காலமாகியுள்ளார்.

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2016இல் உருவாகிய படம் -தங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான தங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தில் பபிதா போஹத்தின் (சான்யா மல்ஹோத்ரா கதாபாத்திரம்) குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நகர் (19) காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரவ குவிப்பு எனப்படும் ஃப்ளூயிட் அக்குமிலேஷன் எனும் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதற்கான மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது உடல் எதிர்வினை ஆற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT