இயக்குநர் ஷங்கர் மகளுக்கு மறுமணம்!
இயக்குநர் ஷங்கரின் மகள் மறுமணம் செய்யவுள்ளார்.
இந்தியாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், இந்தியன் 2 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2022 ஆம் ஆண்டு புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோஹித்தைத் (29) திருமணம் செய்தார். ஆனால், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஹித் போக்சோ வழக்கில் கைதானார். தொடர்ந்து, அவரை விவாகரத்து செய்த ஐஸ்வர்யா, ஷங்கர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கும் ஷங்கரின் துணை இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் முடிவாகியிருக்கிறது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயம் நிகழ்ந்துள்ளது. ஷங்கரின் இளைய மகளும் நடிகையுமான அதிதி, நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.