செய்திகள்

கங்குவா டப்பிங்கில் சூர்யா!

கங்குவா திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.

DIN

சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார்.  இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

தற்போது, படத்தின் அடுத்தக்கட்ட பணிகளைப் படக்குழு துவங்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாக டப்பிங் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கங்குவா படத்திற்கான டப்பிங் பணியில் சூர்யா ஈடுபட்டுள்ளார்.

இந்தாண்டு ஏப்ரல் வெளியீடாக திரைக்கு வர உள்ளதால் தயாரிப்பு நிறுவனம் படத்தின் பணிகளை முடிக்க தீவிரம் காட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT