செய்திகள்

இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்: நடிகை ஊர்வசி!

பிரபல நடிகை ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள ஜே.பேபி படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

DIN

இயக்குநர் பா. ரஞ்சித் நீலம் புரடக்‌ஷனை நடத்திவருகிறார். இதன் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் குண்டு, ரைட்டர், சேதுமான், பொம்மை நாயகி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. 

நீலம் தயாரிப்பின் சார்பாக சமீபத்தில் கிரிக்கெட்டினை மையப்படுத்தி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 

நடிகை ஊர்வசி, நடிகர் தினேஷ் இணைந்து நடித்துள்ள ஜே. பேபி படம் விரைவில் வெளியாக உள்ளது. சுரேஷ் மாரி எழுதி இயக்கியுள்ளார். 

இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. நீலம் தயாரித்த படங்களில் முதன்முறையாக எந்தக் காட்சிகளும் நீக்காமலும் மியூட் செய்யப்படாமலும் யு சர்ட்பிகேட்டுடன் வெளியாகவிருக்கிறது. 

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் 700க்கும் அதிகமான படங்களில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஊர்வசி.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகை ஊர்வசி, “இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரத்தில் ஜே. பேபியில் நடித்துள்ளேன். வேகமாக நடித்து பழகிய எனக்கு இதில் மெதுவாக நடிக்க கடினமாக இருந்தது. பின்னர் போகப்போக நான் எனக்கு ஏற்றமாதிரி மாற்றிக் கொண்டேன். முதலில் இதில் நடிக்க தயக்கமாக இருந்தது. பின்னர் சவாலாக இருக்குமென ஏற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கால்பந்து ரசிகை... வின்சி அலோசியஸ்!

ஹரியாணாவில் அரசு மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் பாதிப்பு!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

விண்டேஜ் கார் பேரணி - புகைப்படங்கள்

நீலாம்பரி என்ற தலைப்பில் படையப்பா -2... ரஜினி கொடுத்த மாஸ் அப்டேட்!

SCROLL FOR NEXT