செய்திகள்

கார்த்தி - 27 படப்பிடிப்பு நிறைவு: விடியோ

நடிகர் கார்த்தி - ’96’  இயக்குநர் பிரேம் குமார் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

DIN

நடிகர் கார்த்தி - ’96’  இயக்குநர் பிரேம் குமார் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘96’.

பள்ளியிலிருந்து பேரிளம் பருவம் வரை தொடரும் நாயகனின் காதலை பல உணர்ச்சிகளுடன் இயக்குநர் பிரேம் குமார் உருவாக்கியிருந்தார்.

அப்படத்தில் இடம்பெற்ற ‘காதலே..காதலே’, ‘லைப் ஆஃப் ராம்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பரவலாக கேட்கப்பட்டு வருகிறது.

6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது, கார்த்தியின் 27-வது படமாகும்.

2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் விடியோ வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT