செய்திகள்

நானி பிறந்தநாள்: புதிய படத்தின் ரிலீஸ் தேதி, க்ளிம்ஸ் விடியோ!

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள சரிபோத சனிவாரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான 'தசரா' கலவையான விமர்சனங்களை பெற்றன.

நானியின் 30வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றதால் இந்தக்கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சரிபோத சனிவாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஏற்கனவே கேங்ஸ்டர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முரளி ஜி. ஒளிப்பதிவு. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.

சரிபோத சனிவாரம் படத்தில் எஸ்.ஜே. சூர்யா

இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT