செய்திகள்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கங்கனா?

நடிகை கங்கனா ராணவத் வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

தமிழில் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் சமீபத்தில் ‘சந்திரமுகி - 2’ படத்தில் நடித்திருந்தார். அவரே இயக்கி, நடித்த எமர்ஜென்சி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

பாஜக ஆதரவாளரான கங்கனா, அடிக்கடி அரசியல் கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சையில் சிக்குவார்.

தற்போது, நிகழ்ச்சி ஒன்றில், “இந்த நாடு எனக்கு எவ்வளவோ செய்துள்ளது. அதை, திருப்பித் தர வேண்டும் என்கிற பொறுப்புடன் இருக்கிறேன். பலராலும் ஆழமாக நேசிப்படுகிறேன். நான் அரசியலுக்கு வர விரும்பினால் இதுதான் சரியான நேரமாக இருக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதனால், வருகிற மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா பாஜக சார்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT