நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை டேக் செய்து அவரைப் போல முன்முடிவுடன் செயல்படுபவர்கள் யாருமில்லை என கங்கனா கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிபிசி ஏசியன் நெட் ஒர்க்கில் அளித்த நேர்காணலில் சமீப காலமாக ஹிந்தி திரையுலகில் வகுப்பு வாத அடிப்படையிலான ஆதிக்கம் மிகுந்து வருவதாகக் கூறினார்.
மேலும் அதில், ”சாவா திரைப்படம் பிரிவினையை தூண்டும் விதமாக இருக்கிறது. ஆனால், அதன் உள்ளடக்கம் தைரியத்தைக் காட்டுவதாக இருப்பதால் அந்தப் படத்துக்கு இசையமைத்தேன்” எனக் கூறினார்.
இது வட மாநிலங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை கங்கனா ரணாவத்தும் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
கங்கனா இயக்கிய எமர்ஜென்சி திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்ற விரும்பவில்லை என்பதையும் கதையைக் கூட கேட்க விரும்பவில்லை எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்
கங்கனா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
டியர் ஏ.ஆர்.ரஹ்மான் ஜி, நான் பிஜேபி கட்சிக்கு ஆதரவாக இருக்கிறேன் என்பதால், சினிமா துறையில் நான் எவ்வளவோ பாரபட்சகளை எதிர்கொண்டிருக்கிறேன். இருந்தும், உங்களை விட மோசமான வெறுக்கத்தக்க மனிதனைப் பார்க்கவில்லை.
என்னுடைய முதல் படத்தின் கதையை உங்களிடம் கூற வேண்டுமென மிகவும் ஆவலாக இருந்தேன். கதையை விடுங்கள், நீங்கள் என்னை சந்திக்கவே மறுத்து விட்டீர்கள். பிரசார படத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டாம் என்றுதான் கூறினேன்.
விமர்சகர்கள் மத்தியில் எமர்ஜென்சி திரைப்படம் மாஸ்டர்பீஸ் எனக் கொண்டாடப்பட்டது.
சமமான, கருணை மிக்க படைப்பாக இருந்ததாக எதிர்க்கட்சியில் இருந்துமே எனக்கு கடிதங்கள் எழுதினார்கள். ஆனால், நீங்கள் கண்மூடித்தனமாக வெறுத்தீர்கள். உங்களுக்காக வருந்துகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.