நடிகர் சித்தார்த். இன்ஸ்டாகிராம்
செய்திகள்

‘இவர்கள் கமெண்ட் செய்தால்...’ சமூக வலைதள டிரெண்டுக்கு நடிகர் சித்தார்த் கூறியது என்ன?

நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய டிரெண்டுக்கு தனது கருத்தினை விடியோவாகப் பதிவிட்டுள்ளார்.

DIN

நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய டிரெண்டுக்கு தனது கருத்தினை விடியோவாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தார். தெலுங்கில் 2021இல் மஹாசமுத்திரம் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. 

தற்போது ஷங்கரின் இயக்கத்தில் கமல் உடன் இந்தியன் 2, நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தற்போது, பிரபலங்கள் தங்களது பதிவு/ விடியோவுக்கு கமெண்ட் செய்தால் படிக்கிறேன், இனிமேல் சமூக வலைதளம் வரமாட்டேன் என பலரும் பலவிதங்களில் பதிவிட்டு வருகிறார்கள். சமுக வலைதளத்தில் தீயாக இதை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் சித்தார்த், “சித்தார்த் கமெண்ட் செய்தால் நான் நாட்டைக் காப்பாற்றுவேன், நன்றாகப் படிப்பேன் எனப் பலவிதமாக பலரும் பதிவிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் நோட்டிபிகேஷன் வருகிறது. முதலில் செய்ய வேண்டியது எதுவோ அதை முதலில் செய்யுங்கள். முதலில் உங்களது தேர்வினை நன்றாக எழுதுங்கள். சமூக வலைதளங்களை மூடுங்கள். தயவுசெய்து படியுங்கள்; தேர்வு எழுதுங்கள். இது மிகவும் மோசமான டிரெண்டிங். இதற்காக உங்கள் பதிவில் கமெண்ட் செய்ய முடியாது. ப்ளீஸ் படிங்கப்பா... படிங்கப்பா... ”என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ”இந்த விடியோவை பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் எந்த உருப்படியான வேலையையும் பார்க்கவில்லை என அர்த்தம்” என கிண்டலாக அந்த விடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார். பலரும் இதை வைரலாக்கி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT