செய்திகள்

கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கிய  திரைப்படம் 'கான்ஜுரிங் கண்ணப்பன்'.

இப்படத்தில் சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம்  கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமரிசனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT