செய்திகள்

சீரியலிலிருந்து விலகியதற்கு மன்னிப்பு கேட்ட நடிகை!

இலக்கியா தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவந்த நடிகை ஹிமா பிந்து, தான் தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை கனத்த இதயத்தோடு பகிர்ந்துள்ளார். 

DIN

இலக்கியா தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவந்த நடிகை ஹிமா பிந்து, தான் தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை கனத்த இதயத்தோடு பகிர்ந்துள்ளார். 

படத்தையும் சின்னத்திரை தொடரையும் ஒரேநேரத்தில் சமாளிக்க முடியவில்லை என்பதாலும், என்னால், தொடர் ஒளிபரப்பாவதில் எந்த சிக்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காக இலக்கியா தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இலக்கியா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில், 
இந்த சீரியலில் சித்தி 2 சீரியலில் நடித்த நந்தன் லோகநாதன், ரூபஸ்ரீ, மீனா வேம்புரி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நடிகை ஹிமா பிந்து நாயகியாக நடித்து வந்தார். தற்போது இலக்கியா தொடரிலிருந்து ஹிமா பிந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

ஹிமா பிந்து

இலக்கியா தொடரில் ஹிமா பிந்துவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதனிடையே இலக்கியா தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை ஹிமா பிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், என்னுடைய சக நடிகர்ளுக்கும் ரசிகர்களுக்கும் நான் மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளேன். இலக்கியா தொடரிலிருந்து விலகுவதாக கனத்த இதயத்துடன் முடிவு செய்துள்ளேன். என்னுடைய இந்த முடிவு யாரையாவது காயப்படுத்தினால் என்ன மன்னிக்கவும். என்னுடைய எல்லைக்கப்பாற்பட்ட பல்வேறு காரணிகளாலும் செயல்களாலும் நான் கடினமான சூழலில் உள்ளேன். 
 
சின்னத்திரை தொடரையும் சினிமாவையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டு இயங்கமுடியவில்லை. என்னுடைய சக நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இது சிரமத்தையே கொடுக்கிறது. என்னால், இந்தத்தொடரில் இனிமேலும் பிரச்னைகள் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இலக்கியாவின் இப்போதைய வெற்றிக்கு நானும் ஒரு பங்காய் இருக்கிறேன் என்பதில் மனம் நிறைகிறேன். உங்களுடைய வரவேற்பே இதற்கு காரணம். எனக்கு கொடுத்த அன்பையும் ஆதரவையும் அடுத்துவருபவருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும். இந்த முடிவில் என்னுடன் நிற்கும் அனைவருக்கும் என் நன்றிகள் எனப் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT