செய்திகள்

நடிகர் நானிக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த கவின்: காரணம் என்ன?

பிரபல தெலுங்கு நடிகர் நானிக்கு கவின் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது வைரலாகியுள்ளது. 

DIN

பிக்பாஸ், சின்னத்திர மூலம் கவனம் பெற்றவர் நடிகர் கவின். ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு இயக்கிய ’டாடா’ படத்தில் நடிகர் கவின் நடித்திருந்தார். இதில் அபர்ணாதாஸ் நாயகியாக நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படம் தெலுங்கில் ‘பா..பா’ என்கிற பெயரில் வெளியானது. 

தெலுங்கில் நானி நடிப்பில் பான் இந்திய படமாக ஹாய் நான்னா படமும் வெளியானது. 

கவினின் டாடா திரைப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பிரபல தெலுங்கு நடிகர் நானி புகழ்ந்து பேசியிருந்தார். இதற்கு நடிகர் கவின் தனது எக்க்ஸ் பக்கத்தில், “நான் மிகவும் மதிக்கும் நபர் எனது படத்தினைப் பாராட்டி பேசுவது  நெகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி நானி சார்” எனக் கூறியுள்ளார். 

இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT