செய்திகள்

வித்தியாசமாக நடைபெற்ற அமீர் கான் மகள் திருமணம்!

 பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகளுக்கு வித்தியாசமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

DIN

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அமீர் கான். இவர் நடிப்பில் வெளியான தங்கல் உலகளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வசூலைக் குவித்தது. தொடர்ந்து, நல்ல படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். 

இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ‘லால் சிங் சத்தா’ விமர்சன ரீதியாக நல்ல படமாக இருந்தாலும் ரசிகர்களால் தோல்விப்படமாக்கப்பட்டது. காரணம், இப்படம் வெளியான நேரத்தில் ‘பாய்காட் பாலிவுட்’ என ரசிகர்களால் தொடர்ச்சியாக இந்திப்படங்கள் புறக்கணிப்பைச் சந்தித்தன. 

சமீபத்தில், சென்னையில் ஏற்பட்ட கனமழையால் குடியிருப்பில் சிக்கியிருந்த விஷ்ணு விஷால் மற்றும் அவரின் மனைவி ஜுவாலா கட்டாவை மீட்டபோது எதிர்பாராத விதமாக, பாலிவுட் நடிகர் அமீர்கானும் அதே பகுதியில் இருந்திருக்கிறார். அவரைத் தொடர்பு கொண்டவர்கள், பத்திரமாக அமீர் கானை மீட்டு விஷ்ணு விஷாலுடன் அழைத்து வந்தனர். 

இந்நிலையில், அமீர்கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீனா தத் இணையின் மகளான இரா கானுக்கும் உடற்பயிற்சியாளர் நுபுர் ஷிக்காரேவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

இதில், நுபுர் எந்தவித திருமண ஆடைகளையும் அணியாமல் உடற்பயிற்சிக்கான ஆடையுடன் வீட்டிருந்து 8 கிலோமீட்டர் ஓட்டமாக வந்து திருமண மண்டபத்தை அடைந்திருக்கிறார். மேலும், அதே ஆடையுடனே திருமண ஒப்பந்தமும் செய்திருக்கிறார். 

அமீர் கானின் மகளுக்கு மிக எளிய முறையில் வித்தியாசமாக நடந்த இத்திருமணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திருமண நிகழ்வில் பங்கேற்ற தன் முன்னாள் மனைவி கிரண் ராவுக்கு அமீர் கான் முத்தம் கொடுத்த விடியோவையும் ரசிகர்கள் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

றெக்கை இல்லாத தேவதை... கீர்த்தி சனோன்!

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

SCROLL FOR NEXT